தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து புதிய இருவண்ண கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்க வேண்டும். ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல், மரக்கன்றுகள் நடுதல் வேண்டும். அன்றைய தினம் காலை 8 மணிக்கு பழைய பஸ் நிலையம் அருகே மாநகர தி.மு.க. அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், அதன் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியும், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
திரளாக...
நாளை சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.