நெல்லை அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை மது குடித்து விட்டு தந்தை தகராறு செய்ததால் சோக முடிவு

நெல்லை அருகே மது குடித்து விட்டு தந்தை தகராறு செய்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-01 21:30 GMT
நெல்லை, 

நெல்லை அருகே மது குடித்து விட்டு தந்தை தகராறு செய்ததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மது குடித்து விட்டு தகராறு

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சிவராமகிருஷ்ணன் (வயது 21). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பரமசிவன் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தந்தை, மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சிவராமகிருஷ்ணன் இனி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்தால், நான் தற்கொலை செய்து விடுவேன் என்று தந்தையிடம் கூறினார்.

தற்கொலை

ஆனல் மகன் பேச்சை கேட்காமல் கடந்த 30-ந் தேதி பரமசிவன் மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவராம கிருஷ்ணன் விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சிவராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்