லஞ்சம் வாங்கிய, வட்ட வழங்கல் அலுவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு

லஞ்சம் வாங்கியதாக கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-06-01 22:30 GMT
விழுப்புரம்,

கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

4½ மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் யயாதிராஜிடம் இருந்து கணக்கில் வராத ரூ.36 ஆயிரத்து 760 மற்றும் அலுவலக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்து 340 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக வட்ட வழங்கல் அலுவலர் யயாதிராஜ், உதவியாளர் கீதா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்