வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2019-05-31 22:15 GMT
வேதாரண்யம்,

மீன்பிடி தடைக்காலம் நடைபெறுவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி இல்லை.ஆனால் பைபர் படகு மீனவர்கள் குறைந்து தூரம் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

மீன்பிடி தடைக்காலம் காரணமாக வேதாரண்யத்தில் மீன்கள் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. வாவல் மீன் ஒரு கிலோ ரூ. 1000-த்திற்கும், காலா மீன்கள் ரூ.800-க்கும், நண்டு ரூ.800-க்கும், சிறிய வகை மீன்கள் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்