நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வைகை ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கலெக்டர் தகவல்
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வைகை ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்டப்பட உள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வைகை ஆற்றில் முத்தனேந்தல் மற்றும் திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களில் நீர்மூழ்கி தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. நீர்மூழ்கி தடுப்பணை திட்டம் விவசாயிகளுக்கு மிகமிக பயனுள்ளதாக இருக்கும்.
விவசாயிகளின் நலன் கருதி சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 இடங்களில் தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக முத்தனேந்தல் மற்றும் இடைக்காட்டூர் பகுதிகளில் 80 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடித்தவுடன் மழைக்காலம் தொடங்கியதும் வைகையாற்றில் வரும் தண்ணீரை நீர்மூழ்கி தடுப்பணை தேக்கி வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம் ஒவ்வொரு தடுப்பணையை சுற்றிலும் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. அத்துடன் விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜகாங்கீர், பத்மநாபன், முத்துக்குமார், இளவேணி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.