வானவில் : கவாஸகி நின்ஜா இஸட்.எக்ஸ்.10ஆர்

கவாஸகி நிறுவனம் தனது சாகசப் பிரியர்களுக்கென மேம்படுத்தப்பட்ட நின்ஜா இஸட்.எக்ஸ்.10 ஆர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.13.99 லட்சமாகும்.

Update: 2019-05-29 05:59 GMT
முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.1.20 லட்சம் அதிகமாகும். இருந்தாலும் இந்தப் பிரிவில் விலை குறைந்த மோட்டார் சைக்கிளாக இது திகழ்கிறது. விலையைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே பைக்கின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து, விற்பனைக்கு விட்டுள்ளது கவாஸகி நிறுவனம். அதேசமயம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இதைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்பதிவு வந்தவுடன் கூடுதல் பதிவை நிறுவனம் நிறுத்திவிடும்.

முன் பதிவு தொகை ரூ.1.50 லட்சமாக நிர்ணயித்து உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் தோற்றப் பொலிவு மட்டுமின்றி செயல்பாட்டிலும் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது 203 ஹெச்.பி. திறன் கொண்டது. சி.பி.ஆர். 1000ஆர்.ஆர். (ரூ.16.41 லட்சம்), பி.எம்.டபிள்யூ.எஸ் 1000.ஆர்.ஆர். (ரூ.18.05 லட்சம்) ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் இது விலை குறைவாக இருப்பது இதற்கு கூடுதல் சாதகமான அம்சமாகும்.

மேலும் செய்திகள்