8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
சேலம் அருகே 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டலாம்பட்டி,
சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம், அயோத்தியாப்பட்டணம் உள்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் நிலத்தில் நடப்பட்ட நிலஅளவீடு கற்களை பிடுங்கி எறிந்தனர்.
மேலும் விவசாயிகள் பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னையில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். அவரது பேச்சு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமைச்சரின் பேச்சை கண்டித்தும், 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எங்களது விவசாய நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். எங்களது வாழ்க்கைக்கு ஜீவதாரமாக உள்ள நிலத்தை கொடுத்து விட்டால், நாங்கள் எங்கே செல்வோம். ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் அமைச்சர் இது பற்றி பேசி இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இதனால் நாங்கள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.