12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை
மராட்டியத்தில் நேற்று வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்து உள்ளன.
மும்பை,
மராட்டியத்தில் நேற்று வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்து உள்ளன.
காமராஜர் நினைவு பள்ளி
மும்பை தாராவியில் தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளது. தேர்வு எழுதிய 82 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். அறிவியல் பிரிவில் மாணவர் அஜித்குமார் சிவலிங்கம் 75.08 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும், சேக் அக்தர் ரஷா சாம்சுல் மற்றும் ஜெனிட்டா சாமுவேல் ஆகிய இருவரும் 65.23 சதவீத மதிப்பெண்களுடன் 2-வது இடமும், மயங்க் ஆனந்த் 64.31 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றனர்.
வணிகவியல் பிரிவில் மாணவி கவிதா பட்டேல் 84.92 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், நேகா பகேலு 79.85 சதவீத மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், கவிதா நாகராஜ் 79.08 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.
காந்தி நினைவு பள்ளி
மாட்டுங்கா லேபர் கேம்பில் காந்தி நினைவு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது.
இதில், மாணவி சேக் ரூபினா 81.79 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடமும், சேக் அஸ்ரப் 81.38 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடமும் பிடித்தனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் செல்லத்துரை பாராட்டினார்.
பாண்டுப் பிரைட்
பாண்டுப் பிரைட் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் வணிகவியல் பிரிவில் 96 சதவீதமும், அறிவியல் பிரிவில் 74 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். வணிகவியல் பிரிவில் தீபக் சவுத்ரி குமார் 531 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், சிவநந்தனி 510 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும், சேக் சுஹானா 505 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடமும் பிடித்தனர்.
அறிவியல் பிரிவில் மீர் ஆசிப் கயாசுதீன் 405 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், சிங்ரூடியோகேந்திரா 366 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும், தீபக் சுதாம் 340 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடமும் பிடித்தனர்.
தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரை பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், கல்லூரி முதல்வர் செலின் ஜேக்கப், தலைமை ஆசிரியர் ஜெஸ்டினா ஜேம்ஸ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
கோவண்டி ராமலிங்கம் ஜூனியர் கல்லூரி
கோவண்டி ராமலிங்கம் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஜூனியர் கல்லூரியில் தேர்வு எழுதிய 40 மாணவர்களும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவி தங்கமாரி 83.67 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், அஞ்சலி 80 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும், சூர்யா 75.72 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடமும் பிடித்தனர். தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ராமலிங்கம் பாராட்டினார்.