கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி அமராவதி ஆற்றங்கரை விழாக்கோலம் பூண்டது
கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கரூர்,
கரூர் மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தினமும் பக்தர்கள் புனித நீர் ஊற்றியும், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தியும் வழிபட்டு வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மதியத்திற்கு மேல் கோவிலை சுற்றி சுத்த பூஜை நடைபெறும். அதன்பின் மாலை 5.15 மணிக்கு கம்பத்தை எடுத்து ஊர்வலமாக கொண்டு சென்று பசுபதி பாளையம் அமராவதி ஆற்றில் விடப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு
இதையொட்டி அமராவதி ஆற்றங்கரையோரம் விழாக்கோலம் பூண்டது. மேலும் கம்பம் விடும் ஆற்றுபகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கம்பம் விடும் நிகழ்ச்சியையொட்டி 850-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது, சர்ச் கார்னர், ஐந்துரோடு உள்ளிட்ட இடங்கள் வழியாக ஜவகர்பஜாருக்கு வாகனங்களில் வருபவர்கள்மாற்று வழியில் செல்வதற்கு வழிகாட்ட வேண்டும் என போலீசாருக்கு எடுத்துரைத்தார்.