மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி

காஷிமிராவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Update: 2019-05-27 22:00 GMT
வசாய், 

தானே மாவட்டம் காஷிமிரா பாலிவில்லேஜ் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 2 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கினார்கள். இதில் உடல் நசுங்கி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த காஷிமிரா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபர்கள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர்கள் மிராரோட்டை சேர்ந்த விரனய் ஜா (வயது19), தேவன் பஞ்சால்(18) என்பதும், இருவரும் கலலூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்