கீழ்வேளூர் அருகே ஓடம்போக்கி ஆற்றில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கீழ்வேளூர் அருகே ஓடம்போக்கி ஆற்றில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கீழ்வேளூர்,
கீழ்வேளூர் சந்தை தோப்பு பகுதியில் ஓடம்போக்கி ஆறு செல்கிறது. நாகை - திருவாரூர் மெயின் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதி மக்கள் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் ஓடம்போக்கி ஆற்றின் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். ஓடம்போக்கி ஆற்றின் தென்புறம் பொதுப்பணித்துறை சார்பில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் பொதுமக்கள் துணி துவைப்பது மற்றும் குளித்து வந்தனர்.
பழுதடைந்த படிக்கட்டுகள்
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படிக்கட்டுகள் இடிந்து பழுதடைந்துள்ளது. இதனால் அந்த படிக்கட்டுகள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் போது படிக்கட்டுகள் பழுதடைந்து இருப்பது தெரியாமல், குளிக்க செல்பவர்கள் நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து விடுகின்றனர். குறிப்பாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் இந்த ஆற்றில் இறங்கி குளித்து விட்டு செல்வது வழக்கம். இதனால் ஆற்றின் படிக்கட்டுகள் பழுது தெரியாமல் இவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சந்தை தோப்பு பகுதியில் உள்ள ஓடம் போக்கி ஆற்றில் கரையை பலப்படுத்தி பழுதடைந்த படிக்கட்டுகளை அகற்றி விட்டு புதிதாக படிக்கட்டுகள் கட்ட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.