1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருவண்ணாமலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2019-05-27 22:45 GMT

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் மாந்தாங்கல் ஏரி பகுதியில் சாராய ஊறல் உள்ளதாக திருவண்ணாமலை கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அவரது தலைமையிலான கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் மாந்தாங்கல் ஏரி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் 4 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். 

சாராய ஊறலை பதுக்கி வைத்தவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி கூறினார்.

மேலும் செய்திகள்