அரக்கோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்க விழா

அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019–ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்க விழா நடந்தது.

Update: 2019-05-27 22:15 GMT

அரக்கோணம், 

விழாவிற்கு கல்லூரி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

விழாவில் நெமிலி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஏ.ஜி.விஜயன், துணை செயலாளர் ஏ.கணேசன், ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மோகன், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்