வானூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

வானூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2019-05-26 22:15 GMT
விழுப்புரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா செட்டிபுண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் துரை மகன் கணேசன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் இவர் விழுப்புரம் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையத்தில் இருந்து கீழ்கூத்தப்பாக்கம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந் தார். ரங்கநாத புரம் என்ற இடத்தில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பனைமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்