அருப்புக்கோட்டையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டையில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-25 22:20 GMT

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத்தினரை விட்டு ஓட்டலிலேயே தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் இரவும் மணிகண்டன் ஓட்டலில் தங்கினார்.

இந்தநிலையில் நேற்று காலை ஓட்டலை திறந்த போது அவர் அங்கு பிணமாக கிடந்துள்ளார். அவரது அருகே வி‌ஷ பாட்டிலும் கிடந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்