திருச்செங்கோடு அருகே தனியார் ஆலை எந்திரத்தில் சிக்கி ஆபரேட்டர் பலி

திருச்செங்கோடு அருகே தனியார் ஆலை எந்திரத்தில் சிக்கி ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-25 21:30 GMT
எலச்சிபாளையம், 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


திருச்செங்கோடு அருகே தோக்கவாடி கவுண்டிபாளையம் பகுதியில் தனியார் காகித ஆலை உள்ளது. இந்த ஆலையில் அதே கிராமத்தை சேர்ந்த அப்புசாமி என்ற செந்தில் (வயது 45) ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் ஆலையில் வேலை செய்யும் போது பெல்ட் கழன்று விட்டதால் எந்திரம் நின்று விட்டது.

உடனே அந்த பெல்ட்டை அவர் சரிசெய்த போது, பெல்ட்டுக்குள் மாட்டிக்கொண்ட அவர் அந்த எந்திரத்துக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன அப்புசாமிக்கு, வசந்தி(40) என்ற மனைவியும், ரோகித்(17) என்ற மகனும் உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்