திருமணமான 4 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வாணாபுரம் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஜோஸ்பின் (வயது 23) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோஸ்பின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜோஸ்பின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட ஜோஸ்பினுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 4 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.