திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: பூந்தமல்லி, திருப்போரூரில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பூந்தமல்லி மற்றும் திருப்போரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

Update: 2019-05-23 23:00 GMT
திருவள்ளூர்,

பூந்தமல்லி(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள ஸ்ரீராம் தொழில்நுட்பகல்லூரி மற்றும் ஸ்ரீராம் வித்யாமந்திர் பள்ளிகளில் எண்ணப்பட்டன.

மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 990 வாக்குகள் பதிவாகி இருந்தது. 28 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் தி.மு.க. வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, 1 லட்சத்து 36 ஆயிரத்து 329 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வைத்தியநாதனைவிட 59,915 வாக்குகள் கூடுதலாக பெற்று உள்ளார்.

தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–

ஆ.கிருஷ்ணசாமி (தி.மு.க.)–1,36,329

வைத்தியநாதன் (அ.தி.மு.க.)–76,414

ஏழுமலை (அ.ம.மு.க.)–14,774

ஜெகதீஷ் குமார் (மக்கள் நீதி மய்யம்)–11714

பாரதி பிரியா (நாம் தமிழர் கட்சி)–10,829

ரவிகுமார் (சுயேச்சை)–333

ரவி (சுயேச்சை)–232

முரளி (சுயேச்சை)–227

சிவகுமார் (சுயேச்சை)–222

வேலு (சுயேச்சை)–217

சசிகுமார் (சுயேச்சை)–214

ஈகை. மணி(இந்திய குடியரசு கட்சி)–182

தசரதன் (சுயேச்சை)–144

நோட்டா–3,158

செல்லாதவை–1

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் என்ற இதயவர்மன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆறுமுகத்தைவிட 21 ஆயிரத்து 013 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒவவொரு வேட்பாளரும் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:

செந்தில் என்ற இதயவர்மன்– தி.மு.க.–1,03,248

 எஸ்.ஆறுமுகம்(அ.தி.மு.க.)–82,235

 கோதண்டபாணி(அ.ம.மு.க.)–11,936

மோகனசுந்தரி(நாம் தமிழர் கட்சி)–9,910

கருணாகரன்(இந்திய குடியரசு கட்சி)–6,039

ராமு(சுயேச்சை)–248

மணிகண்டன்(சுயேச்சை)–254

செந்தில்(சுயேச்சை)–239

மகாதேவன்(சுயேச்சை)–288

கே.ஆறுமுகம் (சுயேச்சை)–364

எஸ். ஆறுமுகம்(சுயேச்சை)–228

 நோட்டா–2,248.

மேலும் செய்திகள்