கிருஷ்ணகிரியில் இன்று வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 658 போலீசார்

கிருஷ்ணகிரியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு 658 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.

Update: 2019-05-22 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஓசூர் சட்டசபை 

தொகுதிக்கு இடைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி 

நடந்தது. இதில் பதிவான மின்னணு வாக்குகள் அனைத்தும் 

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 

வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டுகள் இன்று 

(வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் 

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, காங்கிரஸ் சார்பில் 

டாக்டர் செல்லகுமார் உள்பட 15 பேர் போட்டியிட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த 

வாக்காளர்கள் 15 லட்சத்து 26 ஆயிரத்து 348 ஆகும். இதில் 

ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 72 ஆயிரத்து 614, பெண் 

வாக்காளர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 498, மூன்றாம் பாலின 

வாக்காளர்கள் 236 ஆகும்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 87 

ஆயிரத்து 364 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 68 

ஆயிரத்து 912 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 35 

பேரும் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 311 பேர் 

வாக்களித்துள்ளனர். இது 75.76 சதவீதம் ஆகும்.

அதே போல ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் 

பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி 

பாலகிருஷ்ணரெட்டி, தி.மு.க. சார்பில் எஸ்.ஏ.சத்யா உள்பட 

மொத்தம் 9 பேர் போட்டியிட்டுள்ளனர். ஓசூர் சட்டசபை 

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 

294 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 68 

ஆயிரத்து 186 ஆகும். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 59 

ஆயிரத்து 9, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 99 ஆகும்.


இதில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 

ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 943 பேரும், பெண் வாக்காளர்கள் 

ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 353 பேரும், மூன்றாம் பாலின 

வாக்காளர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 

ஆயிரத்து 306 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 69.45 

சதவீதம் ஆகும். இந்த ஓட்டுகள் அனைத்தும் கிருஷ்ணகிரி 

அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று 

எண்ணப்படுகின்றன.

இதற்காக வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 658 

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அதே போல 

ஓட்டு எண்ணும் பணியாளர்கள் உள்பட மொத்தம் 448 பேர் 

பணியில் இருக்கிறார்கள். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற 

தொகுதியின் வாக்குகள் மொத்தம் 26 சுற்றுகள் 

எண்ணப்படுகின்றன. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற 

தொகுதியின் கீழ் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, 

வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் 

உள்ளன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஒரு மையங்கள் 

வீதம் மொத்தம் 6 மையங்களில் தலா 14 மேசைகள் 

போடப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.


இதைத் தவிர ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 

பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று 

எண்ணப்பட்ட பிறகும், முன்னிலை விவரங்கள் 

அறிவிக்கப்பட உள்ளன. ஓட்டுகள் இன்று எண்ணப்பட 

உள்ளதை முன்னிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி 

வளாகத்தில் உள்ள 3 நுழைவு வாயிலிலும் பாதுகாப்புகள் 

பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரையும் சோதனைக்கு 

பிறகே போலீசார் உள்ளே அனுப்புகிறார்கள்.

இந்த நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் கிருஷ்ணகிரி அரசு 

பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் முன்னேற்பாடு 

பணிகளை பொது பார்வையாளர்கள் ராம்ராவ் போன் ஸ்லே, 

கல்யாண் சந்த் ஷமன், ஆப்ரகாம் மற்றும் கிருஷ்ணகிரி 

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான 

டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்