குன்றக்குடி அருகே, பஸ் மோதி, கல்லூரி காவலாளி பலி

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி காவலாளி பலினார்.

Update: 2019-05-21 22:45 GMT
காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ள வெளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் குன்றக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் வேலை முடிந்து செல்வராஜ் தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வெளியம்பட்டி விலக்கு அருகே வந்த போது துவாரிலிருந்து இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்பு அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்