கோவில்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் காவலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-05-20 22:00 GMT
கோவில்பட்டி,

கள்ளக்காதலி வீட்டில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சிந்தன்நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (வயது 35). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உஷா என்ற மனைவியும், 9 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வகுமாருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் மற்றும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் அதனை பொருட்படுத்தாமல், கடந்த சில நாட்களாகவே தனது வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் தனது கள்ளக்காதலியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த கருப்பசாமி இதுபற்றி நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்