வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

எலச்சிபாளையம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-20 22:30 GMT
எலச்சிபாளையம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே வையப்பமலை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 24). இவர் பி.இ. படித்துள்ளார்.

என்ஜினீயரான இவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் தகுந்த வேலை கிடைக்காததால் வேதனையில் இருந்தார். இதனால் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்தார்.

இதனால் மயங்கி விழுந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுபற்றி எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்