ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவு: திருமங்கலம் வாக்குச்சாவடியில் 81.74 சதவீதம் ஓட்டுகள் பதிவானது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. 81.74 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
வெள்ளகோவில்,
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது பணியாற்றிய வாக்குச்சாவடி அதிகாரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து திருமங்கலம் வாக்குச்சாவடியில்(எண் 248) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த திருமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு, திருமங்கலம், உப்புப்பாளையம் கிழக்கு வீதி, வார்டு 4, உப்புப்பாளையம் கிழக்கு தெரு 3 ஆகிய பகுதிகள் அடங்கும். திருமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் 920 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 445 ஆண் வாக்காளர்களும், 475 பெண் வாக்காளர்களும் அடங்குவர்.
மறுவாக்குப்பதிவுக்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருமங்கலம் வாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன், தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் எந்திரம் வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாட்டுக்காக கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான கதிரவன் நேற்று முன்தினம் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பிறகு காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்து காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று தாங்கள் கொண்டு வந்த பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டைகளை காண்பித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஓட்டுப்போட்டனர். ஆண்களும், பெண்களும் தனித்தனியாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.
கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு விவரத்தை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்த பிறகு வெளியே வந்த கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருமங்கலம் வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தற்போது மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும். வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சென்று கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி சாகுல்அமீது, காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் மாணிக்குர்ஷால், காவல்துறை பார்வையாளர் சஞ்சய் சின்ராவ் சிண்டே ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு வாக்குப்பதிவு விவரங்களை அறிந்து கொண்டனர். வாக்குச்சாவடி மையத்தில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தன.
முன்னதாக மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நேற்று காலை 7 மணியளவில் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகசாமி தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் (காங்கேயம்), திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன், 8 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள், 284 போலீசார் திருமங்கலம் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய 4 துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி வெளிநபர்கள் யாரேனும் திருமங்கலம் வாக்குச்சாவடிக்குள் வராமல் இருப்பதற்காகவும், பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் உப்புபாளையம் ரோட்டில் 2 இடங்களிலும், திருமங்கலம் ரோட்டில் ஒரு இடத்திலும், ரப்பிவலசு பகுதியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டனர். 920 ஓட்டுகள் கொண்ட இந்த வாக்குச்சாவடியில் 752 பேர் ஓட்டுப்போட்டனர். இது 81.74 சதவீதம் ஆகும்.
அதன்பிறகு ஓட்டுகள் பதிவான வாக்கு எந்திரங்கள் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சாகுல்அமீது, முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.