பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் முல்லுண்டு-மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே இன்று காலை 10.26 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை கல்யாணில் இருந்து வரும் விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா-பரேல் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் திவா-பரேல் இடையே அனைத்து ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். பரேலுக்கு பிறகு மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.
சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு மற்றும் திவா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி மற்றும் பாந்திரா இடையே இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷிக்கு ரெயில்கள் இயக்கப்படாது.
இதேபோல் காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா மற்றும் கோரேகாவுக்கு ரெயில்கள் இயக்கப்படாது. மேலும் காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல்,பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், அந்தேரி மற்றும் பாந்திராவிலிருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில் சேவை இருக்காது.
எனினும் இந்த நேரத்தில் பன்வெல் - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவல்களை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.