தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய மர்ம நபர் போலீஸ் விசாரணை

தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-18 22:15 GMT
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உனிசேநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 6 மாதங்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை அவரது தாய் கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார்.

அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த நபர் யார்? என தெரியவில்லை.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்