எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியானால் அரசியலில் இருந்து விலகுவேன் மந்திரி ஜமீர்அகமதுகான் பேட்டி
எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியானால் அரசியலில் இருந்து விலகுவேன் என்று மந்திரி ஜமீர்அகமது கான் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் எங்களுடன் தொடர்பில் இருப்பதாக எடியூரப்பா கூறுகிறார். அதே வேளையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். அதனால் ஆட்சியை கலைக்க நினைக்கும் பா.ஜனதாவினரின் கனவு பலிக்காது. வருகிற 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என்றார்.
இது தற்போது கூட்டணி தலைவர்கள் மத்தியில் பரபரப்பான விவாதமாக மாறிவிட்டது. மேலும் இருகட்சி தலைவர்கள் இடையேயும் மோதலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் உப்பள்ளியில் நேற்று மந்திரி ஜமீர்அகமது கான் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பாவை மீண்டும் ஏன் முதல்-மந்திரியாக வேண்டும்?. மத்திய சிறைச்சாலையை தான் எடியூரப்பா மேம்படுத்தினாா். எக்காரணம் கொண்டும் அவர் முதல்-மந்திரியாக மாட்டார். ஒருவேளை எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியானால் அரசியலில் இருந்து விலகுவேன்.
அவரது வீட்டின் முன்பு சீருடை அணிந்து ஒரு நாள் காவலாளி பணியை செய்வேன். சித்தராமையாவை விமர்சிக்க எச்.விஸ்வநாத்துக்கு உரிமை இல்லை. நாங்கள் சித்தராமையாவின் அப்பட்டமான ஆதரவாளர்கள். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று மாநில மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.