வடுவூர் அருகே வேன் மோதி நெல் வியாபாரி பலி டிரைவர் கைது
வடுவூர் அருகே வேன் மோதி நெல் வியாபாரி பலியானார். இதுதொடர்பாக வேனின் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வடுவூர்,
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் உடையார் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (வயது55). நெல் வியாபாரி. இவர் நேற்று செருமங்கலம் மெயின் சாலையின் ஓரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சையில் இருந்து மன்னார்குடி நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த கார் மீது வேன் மோதியது.
டிரைவர் கைது
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நின்று கொண்டிருந்த ராஜவேலு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் குரவப்புலம் பகுதியை பார்த்தசாரதி (24) என்வரை கைது செய்தார்.