மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து இறைச்சி கடை உரிமையாளர் தற்கொலை போலீசார் விசாரணை
மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து இறைச்சி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை,
நாகை மாவட்டம், திருப்பூண்டி மீன் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் ஹாஜா (வயது 41). இவர் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழக்காட்டில் இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருக்கும், முத்துப்பேட்டை பக்கிரிவாடி சந்து பகுதியை சேர்ந்த பாரூக்பானு (28) என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஹாஜாவுக்கு மதுகுடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை மனைவி பாரூக்பானு, கணவனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஹாஜா மதுவில் விஷத்தை கலந்து குடித்து செம்படவன்காடு சில்லடி வாய்க்காலில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஹாஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்.இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.