மறைமலைநகரில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை கொள்ளை

மறைமலைநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றனர்.

Update: 2019-05-11 21:30 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 48). ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு கணேஷ் சென்றார். வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 65 பவுன் தங்கநகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கணேஷ் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்