செல்போனில் பேரிடர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்

நெல்லை மாவட்ட பொதுமக்கள், செல்போனில் பேரிடர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-05-10 21:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட பொதுமக்கள், செல்போனில் பேரிடர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேரிடர் செயலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அரசு பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தங்களது செல்போனில் TN-S-M-A-RT என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பேரிடர் மற்றும் இயற்கை சீற்ற காலங்களில் மீட்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை எளிதில் அடையாளம் கண்டு செயல்படுத்திட இந்த செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த செயலியை பயன்படுத்தி வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வெப்பச்சலனம், பருவ மழை, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் பருவ கால நிலைக்கு ஏற்ப செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற தகவல் இந்த செயலியில் கிடைக்கப்பெறும்.

வேண்டுகோள்

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக இயற்கை சீற்றங்களால் பாதிக்கும் பகுதி மற்றும் மிகவும் பாதிக்கும் பகுதி என கருதப்படும் பகுதிகள் இந்த செயலியில் கிடைக்கும். ஆகவே பொதுமக்கள் மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைவரும் பொது நலன் கருதி இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்