பள்ளிபாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் அருகே, ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் யார்? என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-09 23:15 GMT
பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே உள்ள தாஜ் நகர் ரெயில் தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. அந்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. தலை தண்டவாளத்தின் அருகில் கிடந்தது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்