இயற்கை பேரிடர் பாதிப்பை தெரிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்து கொள்ள வசதியாக நாமக்கல்லில் செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2019-05-08 22:00 GMT
நாமக்கல், 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக செல்போன் செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த செயலியின் பெயர் TN-S-M-A-RT . அதை இலவசமாக ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்செயலியின் மூலம் புயல், மழை, வெள்ளம், அதிக வெப்பம் மற்றும் பேரிடர் காலங்களில் விழிப்பறிக்கைகள் அனுப்பப்படும். அது முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

இச்செயலியை அனைத்து துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இச்செயலியின் மூலமாக சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர்கள் ஆகியவற்றினை புகைப்படம் எடுத்து அவற்றினை பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலர் அசோகனை 9943237611 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்