தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு.

Update: 2019-05-04 22:15 GMT

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே முட்டைக்காடு, சரல்விளையை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது38), தொழிலாளி. இவர் முட்டைக்காட்டில் இருந்து தக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வீரப்புலியை கனகராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் படுகாயம் அடைந்த பால்ராஜை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், கனகராஜை ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொற்றிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்