325 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பெரம்பலூரில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 325 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்,
பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்து, அதனை கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவுக்கு பெரம்பலூர் மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. இந்தநிலையில் நேற்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான சுகாதார மேற்பார்வையாளர்கள் ராகவன், விநாயகம் ஆகியோர் பெரம்பலூர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென்று ஆய்வு நடத்தினர். அப்போது பெரம்பலூர் வெங்கடேசபுரம் எம்.எம். நகரில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் பெரம்பலூரில் உள்ள சிறிய கடைகளில் ஆய்வு செய்த போது 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா கூறுகையில், ‘பெரம்பலூரில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆய்வு தினமும் நடத்தப்படும். எனவே பெரம்பலூர் நகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது, அதனை விற்பனை செய்யவும் கூடாது’ என்றார்.