தேனி பகுதியில் வீடுகளுக்குள் தஞ்சமடையும் விஷப் பாம்புகள்
தேனி பகுதியில் வீடுகளுக்குள் விஷப்பாம்புகள் தஞ்சம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தேனி,
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலங்களாக விஷப் பாம்புகள் வீடுகள், பள்ளிக்கூடங்கள், கடைகளுக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அவை பிடிபடும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகின்றன. வாய்க்கால் கரையோரம் உள்ள வீடுகள், வீடுகளை சுற்றிலும் புதர்கள் உள்ள பகுதிகள், பழைய பொருட்களை வீட்டுக்கு வெளியே குவித்து வைக்கும் பகுதிகளில் இதுபோன்ற பாம்புகள் அதிக அளவில் பிடிபட்டுள்ளன.
குறிப்பாக தேனி பொம்மையகவுண்டன்பட்டி, ஒண்டி வீரன்நகர், பழனிசெட்டிபட்டி அரசு நகர், தெற்கு ஜெகநாதபுரம், ஆதிப்பட்டி, ரத்தினம் நகர் உள்ளிட்ட இடங்களில் விரியன் பாம்பு, நல்ல பாம்புகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. வீடுகள், கடைகளுக்குள் புகுந்த பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் நபர்கள் பிடித்து அவற்றை வனப்பகுதியில் விட்டு வருகின்றனர்.
ஆதிப்பட்டியில் ஒரு வீட்டில் நேற்று காலையில் நல்ல பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவர் அங்கு சென்றார். அப்போது அந்த வீட்டில் மின்மோட்டாருக்குள் தஞ்சம் அடைந்து இருந்த சுமார் 4 அடி நீள நல்ல பாம்பை அவர் பிடித்தார். அந்த பாம்பை பிடித்துக் கொண்டு இருக்கும் போதே அருகில் உள்ள மற்றொரு வீட்டில் சாரைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கும் அவர் சென்று சுமார் 5 அடி நீள சாரைபாம்பை பிடித்தார். இந்த பாம்புகளை தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
பாம்புகள் நடமாட்டம் குறித்து பாம்பை பிடித்த கண்ணன் கூறுகையில், ‘தேனி பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் 35-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன். இதில் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்புகள்’ என்றார்.
இதேபோல் தேனி தீயணைப்பு படை வீரர்கள் கடந்த ஒரு மாதத்தில் 15-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் தேனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன.
பாம்புகள் வீடுகளை தேடி வரும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது குறித்து தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரனிடம் கேட்டபோது, ‘வீடுகளுக்கு முன்பு தேவையற்ற பொருட்களை போட்டு வைத்தாலும், வீடுகளை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தாலும் பாம்புகள் அங்கு தஞ்சம் அடையும். தற்போது நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. பாம்புகள் இரை தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு இடம் பெயரும் பாம்புகளுக்கு வீடுகளின் முன்பு புதர்கள், தேவையற்ற பொருட்கள் குவிந்து கிடப்பது சாதகமாக அமைந்து விடுகிறது. எனவே, வீடுகளின் முன்பு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.