வானவில் : பாம்பு ரோபோ
புதுப்புது கண்டுபிடிப்புகள் பெருகி வரும் இந்த காலத்தில், சில கருவிகளும் ரோபோக்களும் மட்டுமே மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.
ஜப்பான் நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து ஒரு நவீன ரோபோவை உருவாக்கியுள்ளனர். பார்ப்பதற்கு அச்சு அசலாக பாம்பு போலவே தோற்றமளிக்கும் இந்த ரோபோ மனிதர்கள் நுழைய முடியாத குறுகிய பாதைகளுக்குள் வளைந்து நெளிந்து உள்ளே சென்று விடும்.
பாம்புகளின் அசைவுகளை பல மாதங்கள் கண்காணித்து இதை வடிவமைத்துள்ளனர். ஊர்ந்து செல்ல முடிவதால் இது பைப் போன்ற பொருட்களை பிடித்து மேலே ஏறியும் செல்லும். இந்த பாம்பு ரோபோவில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ சிறிய எடை கொண்ட பொருளையும் தூக்கிச் செல்லக்கூடியது. தண்ணீர் மற்றும் தூசி ஆகியவை பட்டாலும் இது பாதிப்படையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆறு அடி நீளமுள்ள இந்த ரோபோவை அணுசக்தி பேரழிவு நடந்த இடங்களில் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்களை தொலையாமலும் இவை பாதுகாக்கின்றன. பின்னி பிணைந்து இவை கேமராக்களுடன் பொருந்தி கொள்வதால் அவ்வளவு எளிதில் கேமராவை தனியே கழற்றி விட முடியாது.