மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தச்சுத்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் தீர்ப்பு
மடத்துக்குளம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தச்சுத்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியை சேர்ந்தவர் முருகசாமி(வயது 43). தச்சுத்தொழிலாளி. இவர் கடந்த 8-10-2018 அன்று மாலை வீட்டுக்கு அருகே நின்றுள்ளார். அப்போது அந்தப்பகுதியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுள்ளாள். இதை கவனித்த முருகசாமி அந்த சிறுமியை வாயை பொத்தி தூக்கிச்சென்று அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகசாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முருகசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.