திருப்பரங்குன்றத்தில் போட்டியிட கடைசி நாளில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 39 பேர் வேட்பு மனு
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்பட ஒரே நாளில் 39 பேர் மனு தாக்கல் செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய 5 நாட்களில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று மட்டும் போட்டிபோட்டு 39 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். உதவி தேர்தல் அதிகாரிகளான நாகராஜ், அனீஸ் சத்தார் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணத்திடம் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகிய 4 பேர் சென்றிருந்தனர். அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக நிலையூர் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக திருப்பரங்குன்றத்தை அடுத்த பாண்டியன்நகரில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் முன்பு இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் மகேந்திரன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்த கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். பின்னர் தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக பகுதி செயலாளர் ராமமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
இதே போல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக மணி, மனுதாக்கல் செய்தார்.
இது தவிர சுயேச்சை வேட்பாளர்களாக ராஜன், சகாயராஜ், ஆறுமுகம், சுப்பிரமணி, ரமேஷ், நாகராஜ், பாண்டியராஜ், மணிகண்டன், முத்து, தேவசகாயம், முருகன், திருமூர்த்தி, குருசாமி, பழனிக்குமார், பூபதி, சக்திவேல், பூமிநாதன், சிவமுனியாண்டி, சுபாஷினி, ரேவதி, சந்திரஹாசன், முத்துசாமி, மணி, மகேந்திரன், ராமமூர்த்தி, பொன்ராஜ், மன்னன், ஆறுமுகம், உக்கிரபாண்டி, வைர சீமான், தியாகராஜன், சிவா உள்பட நேற்று ஒரே நாளில் 39 பேர் மனு செய்துள்ளனர். மொத்தம் 57 வேட்பாளர்கள் சார்பில் 63 மனுக்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) பரிசீலனை நடைபெறுகிறது. 2-ந்தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.