பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கேரள வாலிபருக்கு 1½ ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணிடம் 4½ பவுன் நகை பறித்த வழக்கில் கேரள வாலிபருக்கு 1½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-04-29 22:15 GMT
நாகர்கோவில்,

சுசீந்திரம் செட்டித் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி உமா (வயது 50). இவர் கடந்த 9.12.2017 அன்று சுசீந்திரம் பால் பண்ணையில் பால் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிபின்(21) மற்றும் ஷெபிக்(21) ஆகியோர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

மோட்டார் சைக்கிளை சிபின் ஓட்டினார். பின்னால் ஷெபிக் அமர்ந்திருந்தார். சிபின், உமாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார், சிபின் மற்றும் ஷெபிக் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் குற்றவியல் கோர்ட்டு எண்-3 ஆஜர்படுத்தியதை தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டின் நேற்று தீர்ப்பு கூறினார்.

அப்போது சிபினுக்கு 1½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து ஷெபிக் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஆசிக் அலி ஆஜரானார்.

மேலும் செய்திகள்