உள்ளாட்சி தேர்தல், இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் மே 13-ந்தேதி வெளியிடப்படும் - கலெக்டர் தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் மே 13-ந்தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2019-04-29 23:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த மாதம் வெளி யிடப்பட்டது. இது தொடர் பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம், கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத் தில் நடந்தது. இதற்கு கலெக் டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்டு உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கலெக்டரின் இருக்கை முன்பு சென்று முறையிட்டனர்.

அப்போது வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக் கப்படவில்லை. எனவே, வாக்குச்சாவடிகள் குறித்து எந்த கட்சியினருக்கும் தெரி யாது. அந்த சூழலில் எவ்வாறு கருத்துகளை கூறுவது என்று கருத்து கேட்பு கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 10 நாட்கள் கழித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து வருகிற 10-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வழங்கவும் அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் கூறிய கருத்துகள்விவரம்வருமாறு:-

கலெக்டர்:- வாக்குச்சாவடி கள் தொடர்பான கருத்துகளை 10-ந்தேதி வரை மனுவாக கொடுக்கலாம். மேலும் தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியம். எனவே, தற்போது அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மக்கள் தயக்க மின்றி வாக்களிக்கும் சூழல் உள்ளதா? என்று கருத்துகளை தெரிவிக்கலாம். அதை பரி சீலனை செய்து முடிவு எடுக் கப்படும்.

சச்சிதானந்தம்(மா.கம்யூ னிஸ்டு):- வரைவு வாக் குச் சாவடி குறித்து மாநக ராட்சி, நகராட்சி, ஊராட்சி களுக்கு தனித் தனியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அதில் முடிவு எடுக்க முடியாத கோரிக்கை களை மாவட்ட அளவிலான கூட்டத்தில் பரிசீலனை செய்ய வேண்டும். இதனால் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

நாகராஜன் (தி.மு.க.):- ஊராட்சி வார்டுகளுக்கு ஒன்றிய அளவில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவதால், எளிதில் தீர்வு காணலாம். அதில் தீர்க்கப் படாத பிரச்சினைகளுக்கு கலெக்டர் தலை மையில் கூட்டம் நடத்தி பரிசீலனைசெய்ய வேண்டும்.

சுருளிவேல் (அ.தி.மு.க.):- திண்டுக்கல் மாநகராட்சியில் பெண்கள் வார்டு ஒதுக்கீட்டில் சரியான விதிகளை அதி காரி கள் கடைபிடிக்க வில்லை.

பின்னர் கலெக்டர் பேசும் போது, வருகிற மே மாதம் 11-ந்தேதி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங் களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதில் கருத்து களை தெரிவிக்கலாம். 13-ந் தேதி இறுதி வாக்குச் சாவடி கள் பட்டியல் வெளி யிடப் படும். பள்ளிக் கட்டிடங் கள் சரியாக இல்லை எனில், அங்கன் வாடி மையம் அல்லது சமுதாயக் கூடத்தில் வாக்குச் சாவடிகள் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக் டரின் நேர்முக உதவியாளர்கள் வான்மதி (தேர்தல்), சதீஷ்பாபு (சத்துணவு) மற்றும் அதிகாரி கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்