ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தர்ணா
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,
வாத்திகுடிக்காடு, அங்கராயன் நல்லூர், வரதராஜன்பேட்டை, நத்தகுழி, மணப்பத்தூர், சுத்தமல்லி, ஆண்டிமடம் போன்ற பகுதிகளிலிருந்து கடலை, எள்ளு போன்ற பயிர்களை விவசாயிகள் விற்பனைக்காக ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று முன் தினம் இரவு கொண்டு வந்திருந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட பயிர்களை நேற்று காலை முதல் வியாபாரிகள் மதிப்பீடு செய்து அளவீடு செய்தனர்.
அவ்வாறு அளவீடு செய்யும்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள தராசில் எடை போடுவதில் குறைவு ஏற்படுவதாக கூறினர். பின்னர் எடை போடும் பணியை நிறுத்த கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சரியான தராசு எடுத்து வந்து எடை போட வேண்டும். விலை நிர்ணயம் சரியாக செய்வதில்லை. ஒரே பயிரை இரண்டாக பிரித்து வெவ்வேறு இடங்களில் விலை நிர்ணயம் செய்யும்போது வெவ்வேறு விலை போடப்படுகிறது.
விற்பனை கூடத்தில் எடை எந்திரம் சரி இல்லை எனவும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ஒரு கணினி தராசு மட்டுமே உள்ளதால் எடை போட நீண்ட நேரம் ஆகிறது. மேலும் பணம் கொடுப்பதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் நேற்று சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து உள்ளே சென்ற விவசாயிகள் முறையான தராசு வைத்து எடை போட வேண்டும் என கோரி உள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் முகமதுயூசுப் மற்றும் தொழிலாளர் துறை ஆய்வாளர் ஜெயராஜ் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முத்திரை ஆய்வாளர் ராஜா மற்றும் எடை எந்திர மெக்கானிக் ஆகியோரை வரவழைத்து எடை குறைவாக இருந்த எந்திரத்தை விவசாயிகளின் முன்னிலையில் சரி செய்து மீண்டும் முறையாக இயக்கி சரி செய்தனர். இதையடுத்து எடை போடும் பணி மீண்டும் தொடங்கியது. இதனால் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.