வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 70). சம்பவத்தன்று இவர் ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் நந்தகுமார் மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த நந்தகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நந்தகுமார் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொம்மதாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாதம்மா (70). சம்பவத்தன்று இவர் ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் மாதம்மா மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த மாதம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.