எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 255 பணிகள்

அலுவலக பணிகளுக்கு 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்

Update: 2019-04-29 04:38 GMT
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணிகளுக்கு 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது ரிஷிகேஷில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ கிளை மையத்தில் மருத்துவ அதிகாரி, துணை மருத்துவ கண்காணிப்பாளர், பிளட் டிரான்ஸ்பியூசன் ஆபீஸர் உள்ளிட்ட 30 விதமான பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை கற்பித்தல் சாராத பணியிடங்களாகும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கும், இதர பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பி.எஸ்சி. நர்சிங், பிளஸ்-2 படிப்புடன் துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் லேப் டெக்னீசியன் பணிக்கும், 10-ம்வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

அதிகாரி பணியிடங்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், இதர பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3-6-2019-ந் தேதியாகும்.

இதுபற்றிய விவரங்களை http://aiimsrishikesh.edu.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்