4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பண பட்டுவாடாவை தடுக்க வாகனங்களில் பறக்கும் படையினர் சோதனை

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க வாகனங்களை வழி மறித்து பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-28 23:15 GMT
உத்தமபாளையம்,

தமிழ்நாட்டில் கடந்த 18-ந்தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்தது.

இந்தநிலையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இடைத்தேர்தலில் வாக் காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டம் முழுவதும் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஏற்கனவே மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக பணியில் ஈடுபட்ட பறக்கும் படை குழுவினர் அடுத்த மாதம் 19-ந்தேதி வரை வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முதல் தேனி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் வழி மறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்று பறக்கும்படையினர் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்