தாவணகெரே பல்கலைக்கழகம் அருகே பரிதாபம்: ஸ்கூட்டர் மீது கார் மோதியது; மாணவி பலி
தாவணகெரே பல்கலைக்கழகம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிக்கமகளூரு,
தாவணகெரே அருகே கூர்கி கிராமத்தை சேர்ந்தவர் சைலஜா (வயது 23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னரும் அவர், தாவணகெரே பல்கலைக்கழகத்தில் கணித துறையில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சைலஜா, பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக, ஸ்கூட்டரில் புறப்பட்டார். அவர் தனது ஸ்கூட்டரில் புறப்பட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து சிறிது தூரம் சென்றார்.
அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென்று அந்த காரின் டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சைலஜா சென்ற ஸ்கூட்டர் மீது கார் மோதியது.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சைலஜா, காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் பலியான சைலஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சைலஜாவின் ஸ்கூட்டரின் மீது கார் மோதிய காட்சி அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் பல்கலைக்கழகம் இருக்கும் சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை என தெரிகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் பல்கலைக்கழகம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
தாவணகெரே பல்கலைக்கழகம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-