பன்றி வேட்டையின்போது சம்பவம்: சிறுவன் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது 2 வாலிபர்கள் கைது
பன்றி வேட்டையின்போது குறி தவறி சிறுவன் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு 2 பேர் ஒரு சிறுவனை படுகாயத்துடன் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். டாக்டர்கள் சிறுவனை பரிசோதனை செய்தததில், அவனது முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதை கண்ட டாக்டர்கள், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, சிறுவனின் முதுகில் இருந்த குண்டினை அகற்றி, தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே மருத்துவமனைக்கு வந்த மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவன் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் அய்யப்பன்(வயது 14) என்பதும், அவன் துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒருவர் அய்யப்பனின் மாமாவான அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா நமங்குணம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் தர்மலிங்கம்(22) என்பதும், மற்றொருவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், குறுவிலபுரம் கிராமத்தை சேர்ந்த உறவினர் ஏழுமலை மகன் மணி(25) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் கூறுகையில், நாங்கள் மூவரும் பன்றி இறைச்சி விற்பனை செய்வதற்கு, அதனை மொத்தமாக வாங்குவதற்காக நேற்று முன்தினம் தொழுதூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றோம். அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் நடுவே அமர்ந்திருந்தான். அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்ற போது திடீரென்று குண்டுவெடித்த சத்தம் கேட்டது. அப்போது அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தான். அவன் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் பீறிட்டு வந்தது.
இதனால் அவனை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம் என்றனர். அய்யப்பனை யாராவது கொல்வதற்காக துப்பாக்கியால் சுட்டிருப்பார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். மேலும் தர்மலிங்கம், மணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். அப்போது தர்மலிங்கம், மணி ஆகியோர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
நேற்று முன்தினம் மாலை தர்மலிங்கம், மணி, அய்யப்பன் ஆகியோர் பன்றி வேட்டைக்காக தொழுதூர் கல்பூண்டியில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பன்றியை சுட்டு பிடிப்பதற்காக நாட்டு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தனர். தர்மலிங்கம் பன்றியை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, குறி தவறி குண்டு அய்யப்பன் முதுகில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அய்யப்பன் சுருண்டு கீழே விழுந்தான். மேலும் குண்டு பாய்ந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவனை சேர்த்தோம். பின்னர் மேல் சிகிச்சைக்காக அய்யப்பனை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் என்றனர்.
இந்த சம்பவம் கடலூர் மாவட்டம், தொழுதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், மங்களமேடு போலீசார், தர்மலிங்கம், மணி ஆகியோரை தொழுதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தொழுதூர் போலீசார் தர்மலிங்கம், மணி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது உரிய அனுமதியுடன் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் கூட அந்தந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் தர்மலிங்கம் துப்பாக்கியை ஏன்? போலீசில் ஒப்படைக்கவில்லை என்று உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.