குரங்கணி மலைப்பகுதியில் கருகிப்போன பாக்கு மரங்கள் விவசாயிகள் பாதிப்பு
குரங்கணி மலைப்பகுதியில் பாக்குமரங்கள் கருகிப்போனதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போடி,
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பட்டா நிலங்கள் உள்ளன. இங்கு காபி, எலுமிச்சை, மிளகு, பாக்கு, இலவம் பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இந்த பகுதியில் ஓங்கி உயர்ந்து நிற்கும் பாக்கு மரங்கள் ஏராளமான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் வெயில் அடித்ததால் பாக்கு மரங்கள் வறட்சியாலும், தண்ணீர் இன்றியும் கருகிப்போனது. மரங்களின் தலைப் பகுதிகள் கருகியதால் மரங்கள் மொட்டையாகின. இவ்வாறு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் காய்ப்பு திறனை இழந்துள்ளன.
எனவே விவசாயிகள், கருகிப்போன பாக்குமரங்களை கூலிக்கு ஆட்கள் வைத்து வெட்டி வருகின்றனர். சில விவசாயிகள் வெட்டப்பட்ட பாக்கு மரங்களை தோட்டங்களிலேயே போட்டு வைத்துள்ளனர். மரங்கள் கருகிப்போனதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே கருகிப்போன பாக்குமரங்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.