வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: கரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
ரெயில்களில் குண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் வந்ததன் எதிரொலியாக கரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த முன்னாள் ராணுவ வீரர் சுந்தரமூர்த்தி தமிழ்நாடு, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதையடுத்து தமிழக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழக ரெயில்நிலையங்களில் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்புக்காக போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று கரூர் ரெயில் நிலையத்திலும் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்பட ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தினுள் நவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்ட பின்னரே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் கரூர் வழியாக செல்லும் ரெயில்களில் ஏறிய போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான நபர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் ஏதும் உள்ளதா? எனவும் கண்காணித்து வருகின்றனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட விவரங்களை எடுத்து கூறி பயணிகள் பீதியடையாமல் உஷாராக இருந்து கொண்டு, ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்து பாதுகாப்புக்கு ஒத்துழைக்குமாறு போலீசார் கேட்டு கொண்டனர்.