சிறுமியை கற்பழித்த தச்சு தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கற்பழித்த தச்சு தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2019-04-25 23:16 GMT
தானே, 

தானே மனோரமா நகரை சேர்ந்தவர் சிவ்மணி(வயது33). தச்சு தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சிவ்மணி சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.

இந்தநிலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவத்தை கூறி சிறுமி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவ்மணியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது சிவ்மணி மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியை கற்பழித்த குற்றத்துக்காக தச்சு தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தும் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்