இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சியில் வழிபாட்டு தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர்.
இதேபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெயில் நிலைய நடைமேடைகளிலும், ரெயில்களிலும் சோதனை நடந்தது. சென்னையில் இருந்து மதுரை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏறி பெட்டிகளை சோதனையிட்டனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.